100 கோடி கொண்டாட்டம் - பட்டைய கிளப்பும் மோகன்லாலின் `துடரும்'

மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஷோபனா `துடரும்' படத்தில் நடித்துள்ளார்.துடரும் திரைப்படத்தை தருன் மூர்த்தி இயக்கியுள்ளார்.
100 கோடி கொண்டாட்டம் - பட்டைய கிளப்பும் மோகன்லாலின் `துடரும்'
Published on

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஷோபனா `துடரும்' படத்தில் நடித்துள்ளார். மோகன்லாலுக்கு இது 360 - வது படம் ஆகும். ஷோபனா 20 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இணைந்து நடித்த மணிச்சித்திரதாழு, தென்மாவின் கொம்பத், பால கோபாலன் எம்.ஏ, பவித்ரம், மின்னாரம் ஆகிய படங்கள் மிகப் பெரிய படங்களாக அமைந்தது. ஷோபனா மற்றும் மோகன்லால் ரீல் ஜோடியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்கள்.

துடரும் திரைப்படத்தை தருன் மூர்த்தி இயக்கியுள்ளார். படத்தை ரெஞ்சித் தயாரித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 1 வாரத்தில் வசூலில் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் கொண்டாட்ட என்ற வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த 1 மாதத்தில் இவர் நடிப்பில் வெளியான எம்புரான் மற்றும் துடரும் ஆகிய இரண்டு திரைப்படங்களும் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படம் திரிஷ்யம் திரைப்படத்தை போல் சஸ்பென்ஸ் திரில்லராக அமைந்துள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com