நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் சித்ரா - வரதன் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது. #CCV
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்
Published on

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

படப்பிடிப்பு முடிந்து, பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடித்துள்ள 4 நாயகர்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாகி வந்தது. அதன்படி அரவிந்த்சாமி வரதன் என்ற கதாபாத்திரத்திலும், அருண் விஜய் தியாகு என்ற கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி ரசூல் என்ற கதாபாத்திரத்திலும், சிம்பு எதி என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. 

தற்போது டயானா, சாயா என்ற கதாபாத்திரத்திலும், ஜோதிகா சித்ரா என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக படக்குழு அறித்துள்ளது. இதில் டயானாவும் சிம்புவும் ஜோடியாக சாயா - எதி என்ற போஸ்டரை நேற்று வெளியிட்டார்கள். இன்று ஜோதிகா, அரவிந்த் சாமி ஜோடி சித்ரா - வரதன் போஸ்டரை இன்று வெளியிட்டிருக்கிறார்கள்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் இந்த படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. #ChekkaChivanthaVaanam #CCV

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com