சினிமா, விவசாயம் போல் ஆகிவிட்டது: சேரன் வேதனை

சினிமாவில் போட்ட பணம் கிடைப்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சினிமாவும் விவசாயம் போல் ஆகிவிட்டது என்று இயக்குனர் சேரன் கூறியுள்ளார்.
சினிமா, விவசாயம் போல் ஆகிவிட்டது: சேரன் வேதனை
Published on

“பார்க்கிற சினிமாவிற்கும், அதன் உருவாக்கத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். சினிமா தற்போது விவசாயம் மாதிரியாகி விட்டது. முதலீடு திரும்ப கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி விட்டது. தற்போது சினிமா வெற்றி பெற மார்க்கெட்டிங் தான் முக்கியம். அதிலும் நேர்மையாக மார்க்கெட்டிங் பண்றவங்களும் உள்ளனர், ஏமாற்றுபவர்களும் இருக்கின்றனர்.

படம் வெளியான அன்றே வெற்றிக்கான பார்ட்டி வைத்து ஏமாற்றும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாத்துறை நன்றாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பணம் வைத்திருப்பவர்கள் பணத்தின் மூலம் எல்லா தொழிலுக்கும் வந்து விட்டனர்.

சினிமாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளே புகுந்து படம் பண்ண தெரியா விட்டாலும் கோடிக்கணக்கில் படத்தினை வாங்கி வெளியிடுகின்றனர். லாபம் வருதோ இல்லையோ? மற்ற தொழில்களில் கிடைத்த கள்ள பணத்தினை சினிமாவில் புகுத்தி நல்ல பணமாக மாற்றிக்கொள்ளும் வழியை கண்டுபிடித்துள்ளனர். இவர்களால் சினிமா துறை சீரழிந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com