அறிக்கை விடுகிறவர்களை முதலில் விவசாயம் செய்யச் சொல்லுங்க: இயக்குநர் சேரன் காட்டம்

அறிக்கை விடுகிறவர்களை முதலில் விவசாயம் செய்யச் சொல்லுங்க என்று விஷாலை மறைமுகமாக தாக்கி இயக்குநர் சேரன் காட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
அறிக்கை விடுகிறவர்களை முதலில் விவசாயம் செய்யச் சொல்லுங்க: இயக்குநர் சேரன் காட்டம்
Published on

இந்நிலையில், நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான நடிகர் விஷால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகளை போல், தமிழக அரசும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

விஷாலின் இந்த கடிதத்தை இயக்குநரும், நடிகருமான சேரன்  மறைமுகமாக சாடியுள்ளார். இதுகுறித்து சேரன், அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

"ஆடு நனைகிறதென ஓநாய்கள் கவலை கொள்ளும். விவசாயிகள் பாவமென விவரமில்லாதோர் அறிக்கை விடுவார்கள் அவர்களை முதலில் தமிழ்நாட்டில் விவசாயம் செய்யச் சொல்லுங்க"

X

Maalai Malar
www.maalaimalar.com