ரஜினி-கமல் கூட்டணி அமைத்தால் மகிழ்ச்சி - அக்‌ஷரா ஹாசன்

நடிகையும், கமல்ஹாசனின் மகளுமான அக்‌ஷரா ஹாசன், என் அப்பாவும் ரஜினியும் கூட்டணி அமைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
அக்‌ஷரா ஹாசன்
அக்‌ஷரா ஹாசன்
Published on

நடிகையும், கமல்ஹாசனின் மகளுமான அக்‌ஷரா ஹாசன் சென்னையில் இன்று மாலைமலருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:-ரஜினியுடன் கமல் கூட்டணி அமைத்தால் வரவேற்பீர்களா?

பதில்:- இருவரும் நெருங்கிய நண்பர்கள். தொடக்கம் முதலே சேர்ந்து பயணித்தவர்கள். எனவே ரஜினியுடன் அப்பா (கமல்) அரசியலில் கூட்டணி அமைத்தால் மகிழ்ச்சி.

ரஜினி சார் வந்தாலும் ஓ.கே... வராவிட்டாலும் ஓ.கே.தான். அவர்கள் இணைய வேண்டும் என்பதில் விருப்பம் உண்டு.

கே:- கடந்த நவம்பர் மாதம் உங்கள் ஆபாச படம் பரவியதாக வதந்தி வந்ததே. அதனை எப்படி எதிர் கொண்டீர்கள்?

ப:-அந்த சம்பத்திற்கு பிறகுதான் எனக்கு பெரிய பக்குவம் வந்தது. பெண்களுக்கு எல்லா இடங்களிலும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

இந்த சூழலை பெண்கள் துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும். உங்களை ஒருவர் தவறாக அழைத்தால் அவரிடம் முடியாது என்று தைரியமாக சொல்ல வேண்டும். எதிர்த்து நின்று போராட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com