ஸ்ரீலீக்ஸ் சர்ச்சையில் சிக்கிய ராணா தம்பி - புகைப்படம் வெளியாகியதால் பரபரப்பு

தெலுங்கு படஉலகில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஸ்ரீலீக்ஸ் சர்ச்சையில் நடிகர் ராணாவின் தம்பி அபிராம் டகுபதியும் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது. #SriReddy #SriLeaks
ஸ்ரீலீக்ஸ் சர்ச்சையில் சிக்கிய ராணா தம்பி - புகைப்படம் வெளியாகியதால் பரபரப்பு
Published on

தெலுங்கு பட உலகில் நடிகைகளை அங்குள்ள நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். பாலியல் தொல்லை கொடுப்பவர்களின் புகைப்படங்களை வெளியிடுவேன் என்றும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

பின்னர் தனக்கு நடிகர் சங்க உறுப்பினர் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கூறி திரைப்பட வர்த்தக சபை முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, நடிகை ஸ்ரீரெட்டிக்கு படங்களில் நடிப்பதற்கு தடை விதிப்பதாக தெலுங்கு நடிகர் சங்கம் அறிவித்தது. 

இதையடுத்து பிரபல தயரிப்பாளரின் மகன் அடிக்கடி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அரசுக்கு சொந்தமான அந்த ஸ்டூடியோவுக்குள் யாரும் வரமாட்டார்கள் என்பதால் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஸ்டூடியோவை சிவப்பு விளக்கு பகுதியாகவே மாற்றிவிட்டனர் என்றும் கூறி அதிர்ச்சியை கிளப்பினார். 

மேலும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் மகன் தொடர்பான புகைப்படங்களை விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறிய பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரான டகுபதி சுரேஷ் பாபுவின் மகனும், தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராணா டகுபதியின் தம்பியுமான அபிராம் டகுபதியுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். 

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #SriReddy #SriLeaks

X

Maalai Malar
www.maalaimalar.com