வெஸ்பா மாடல்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை சலுகை அறிவிப்பு

பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா மற்றும் அப்ரிலியா ஸ்கூட்டர் மாடல்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வெஸ்பா
வெஸ்பா
Published on

பியாஜியோ குழுமம் தனது பிரீமியம் வெஸ்பா மற்றும் அப்ரிலியா ஸ்கூட்டர் பிராண்டுகளுக்கு குறுகிய கால சலுகையை அறிவித்து இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் மாடல்களுக்கும், அப்ரிலியா எஸ்ஆர் 160, எஸ்ஆர் 125 மற்றும் ஸ்டாம் 125 மாடல்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த மாடல்களுக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகின்றன. 

இவற்றில் ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பலன்களும், ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள இலவச அக்சஸரீக்களும் அடங்கும். இத்துடன் ஒரு ஆண்டுக்கான இலவச சர்வீஸ் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. இதில் முதல் இரு ஆண்டுகளுக்கு ரோடு-சைடு அசிஸ்டண்ஸ் வசதியும் வழங்கப்படுகிறது.

மேலும் ஆன்லைன் தளத்தில் ஸ்கூட்டர்களை வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த  சலுகைகள் நவம்பர் 16 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com