டொயோட்டா கார்களுக்கு ரூ. 1.18 லட்சம் வரையிலான விலை உயர்வு அறிவிப்பு

டொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்களின் புதிய விலை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.
டொயோட்டா கார்
டொயோட்டா கார்
Published on

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இன்னோவா க்ரிஸ்டா, பார்ச்சூனர், லெஜண்டர் மற்றும் கேம்ரி மாடல்களின் புதிய விலை விவரங்களை வெளியிட்டு உள்ளது. 

அதன்படி கேம்ரி மாடல் முன்பை விட ரூ. 1,18,000 அதிகமாகி தற்போது ரூ. 40.59 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆடம்பர செடான் மாடல் 2.5 லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் கொண்டுள்ளது. இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 26 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல் மற்றும் டீசல் மாடல் புதிய விலை முறையே ரூ. 16.52 லட்சம் மற்றும் ரூ. 16.90 லட்சம் என மாறி இருக்கிறது. பார்ச்சூனர் எஸ்யுவி மாடல் விலை ரூ. 36 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் முன்பை விட ரூ. 72 ஆயிரம் அதிகமாகி இருக்கிறது. இதன் புதிய துவக்க விலை ரூ. 38.30 லட்சம் ஆகும்.

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. டொயோட்டா நிறுவனத்தின் கிளான்சா, அர்பன் குரூயூசர், வெல்பயர் போன்ற மாடல்களின் விலை தற்போது மாற்றப்படவில்லை. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com