இந்தியாவில் டாடா டியாகோ லிமிடெட் எடிஷன் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ லிமிடெட் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா டியாகோ
டாடா டியாகோ
Published on

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் டியாகோ லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5.79 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் மாடல் எக்ஸ்டி வேரியண்டை தழுவி உருவாகி இருக்கிறது.

புதிய லிமிடெட் எடிஷன் மாடல் பிளேம் ரெட், பியல்சென்ட் வைட் மற்றும் டேடோனா கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. வெளிப்புறம் 14 இன்ச் அலாய் வீல்கள் கிளாஸ் பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இவை தவிர புதிய மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 

உள்புறம் 5 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஹார்மன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ரிவர்ஸ் பார்கிங் சென்சார் மற்றும் டிஸ்ப்ளே வசதி வழங்கப்படுகிறது. புதிய டியாகோ மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் டாப் எண்ட் மாடல்களில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com