2021 மஹிந்திரா எக்ஸ்யுவி500 வெளியீட்டில் மீண்டும் மாற்றம்

மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2021 எக்ஸ்யுவி500 புது வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா எக்ஸ்யுவி500
மஹிந்திரா எக்ஸ்யுவி500
Published on


அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய எஸ்யுவி மாடல் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், அவ்வாறு அறிமுகமாகவில்லை. பின் இந்த மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய எக்ஸ்யுவி500 மாடல் இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் விற்பனை செப்டம்பர் மாத வாக்கில் துவங்கலாம் என்றும் கூறப்படுகிறது. வினியோகம் நவம்பர் மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது. 

வெளியீட்டுக்கு முன் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யுவி400 மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இந்த மாடலின் பொனெட்டில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. 

புதிய 2021 மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடலில் 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 152 பிஹெச்பி பவர், 360 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com