வெளியீட்டுக்கு தயாராகும் புதிய போர்ஸ் குர்கா

கடந்த ஆண்டு வெளியாக இருந்த போர்ஸ் குர்கா மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
போர்ஸ் குர்கா
போர்ஸ் குர்கா
Published on

புத்தம் புதிய போர்ஸ் குர்கா மாடல் வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட போர்ஸ் குர்கா மாடல் கடந்த ஆண்டே வெளியிட திட்டமிடப்பட்டது. 

புதிய குர்கா மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் மாடலை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. எனினும், புது குர்கா மாடலில் மேம்பட்ட லேடர் பிரேம் சேசிஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் சதுரங்க வடிவில் அப்படியே காட்சியளிக்கிறது. இந்த மாடலில் புதிய பம்ப்பர்கள், ஹெட்லைட், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட டெயில் லேம்ப், புதிய முன்புற கிரில் வழங்கப்படுகிறது.

புதிய குர்கா மாடல் மூன்று மற்றும் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்ட், 2-வீல் மற்றும் 4-வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 90 பி.ஹெச்.பி. பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com