எம்ஜி ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் விலையில் மீண்டும் மாற்றம்

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்கள் விலையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது.
எம்ஜி ஹெக்டார்
எம்ஜி ஹெக்டார்
Published on

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் 2021 ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்களின் விலையை இரண்டாவது முறையாக உயர்த்தி உள்ளது. முன்னதாக ஜனவரி 1 ஆம் தேதி முதல் இதன் விலை உயர்த்தப்பட்டது. கார் உற்பத்தி செலவீனம் அதிகரிப்பதே விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

2021 எம்ஜி ஹெக்டார் பேஸ் வேரியண்ட்களான ஸ்டைல் மற்றும் சூப்பர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இவை தொடர்ந்து ரூ. 12.90 லட்சம் மற்றும் ரூ. 13.89 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மிட் ரேன்ஜ் ஸ்மார்ட் வேரியண்ட் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

அதன்படி எம்ஜி ஹெக்டார் ஸ்மார்ட் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 15.75 லட்சம் மற்றும் ரூ. 17.02 லட்சம் என மாறி இருக்கின்றன. டாப் எண்ட் ஷார்ப் வேரியண்ட்களின் விலையும் ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

ஹெக்டார் பிளாஸ் ஸ்டைல் மற்றும் சூப்பர் வேரியண்ட்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் ஸ்மார்ட் எம்டி டீசல் வேரியண்ட் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் டாப் எண்ட் ஷார்ப் வேரியண்ட் விலையும் ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஸ்மார்ட் எம்டி மற்றும் டீசல் எம்டி 7 சீட் வேரியண்ட் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com