இந்த ஆண்டு முதல் முறை - ஹோண்டா டியோ விலை திடீர் மாற்றம்

இந்திய சந்தையில் ஹோண்டா டியோ ஸ்கூட்டர் மாடல் விலை 2021 ஆண்டில் முதல் முறையாக மாற்றப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா டியோ
ஹோண்டா டியோ
Published on

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது டியோ ஸ்கூட்டர் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்தியாவில் ஹோண்டா டியோ மாடல்- ஸ்டான்டர்டு, டீலக்ஸ் மற்றும் ரெப்சல் எடிஷன் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

தற்போதைய விலை உயர்வின் படி டியோ எஸ்டிடி வேரியண்ட் ரூ. 62,229 என மாறி இருக்கிறது. இதன் டிஎல்எக்ஸ் மற்றும் ரெப்சல் எடிஷன் முறையே ரூ. 65,627 மற்றும் ரூ. 68,127 என மாறி இருக்கின்றன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

விலை உயர்வு தவிர இந்த ஸ்கூட்டரில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஹோண்டா டியோ ஸ்கூட்டர் 109 சிசி என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 7.6 பிஹெச்பி பவர், 9 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இந்திய சந்தையில் ஹோண்டா டியோ மாடல் டிவிஎஸ் ஜூப்பிட்டர் 110, ஹீரோ பிளெஷர் பிளஸ் 110 மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com