ஃபோர்ஸ் குர்கா வெளியீட்டில் திடீர் மாற்றம்

ஃபோர்ஸ் நிறுவனம் தனது புதிய குர்கா மாடல் வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஃபோர்ஸ் குர்கா
ஃபோர்ஸ் குர்கா
Published on

ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6 மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. புதிய குர்கா மாடலில் பிஎஸ்6 ரக என்ஜின் மட்டுமின்றி பெரிய சக்கரங்களை கொண்டிருக்கிறது. காட்சிக்கு வைக்கப்பட்டது முதல் இந்த கார் மாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய குர்கா மாடலை இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இந்த மாடல் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. அந்த வகையில் புதிய மேம்பட்ட எஸ்யுவி மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தெரிகிறது.

மாருதி சுசுகி நிறுவனம் தனது ஜிம்னி மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுதவிர சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா தார் என இரு மாடல்கள் ஃபோர்ஸ் குர்கா மாடலுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com