

பியாஜியோ இந்தியா நிறுவனம் தனது SXR 125 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. அப்ரிலியா SXR 125 முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் ஆகும். முன்பதிவு ஆன்லைன் மற்றும் அப்ரிலியா விற்பனையகங்களில் நடைபெறுகிறது.
அப்ரிலியா SXR 125 மாடலில் ட்வின்-பாட் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில்லைட், புல் டிஜிட்டல் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ரியர் சஸ்பென்ஷன், முன்புறம் டிஸ்க் பிரேக் மற்றும் சிபிஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை அப்ரிலியா SXR 125 மாடலில் 125சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. மூன்று வால்வுகள் மற்றும் பியூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட இந்த என்ஜின் 9.4 பிஹெச்பி பவர், 9.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.