இந்தியாவில் 2021 போர்ஷ் பனமெரா அறிமுகம்

போர்ஷ் நிறுவனத்தின் 2021 பனமெரா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
2021 போர்ஷ் பனமெரா
2021 போர்ஷ் பனமெரா
Published on

போர்ஷ் நிறுவனத்தின் 2021 பனமெரா மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய சீரிஸ் பனமெரா, பனமெரா ஜிடிஎஸ், பனமெரா டர்போ எஸ் மற்றும் பனமெரா டர்போ எஸ்இ ஹைப்ரிட் என நான்கு மாடல்களில் கிடைக்கிறது. இவற்றின் துவக்க விலை ரூ. 1.45 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய மாடல்களில் பெரிய ஏர் இன்டேக் கிரில், பக்கவாட்டில் பெரிய கூலிங் வென்ட்கள், முன்புறம் சிங்கில் பார் லைட் யூனிட் வழங்கப்பட்டு இருக்கின்றன. டர்போ எஸ் மாடலில் சற்றே பெரிய ஏர் இன்லெட்கள் வழங்கப்பட்டு உள்ளன. பின்புறம் லைட் ஸ்ட்ரிப், எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

பனமெரா மாடல்களில் 2.9 லிட்டர் வி6 பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 325 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பனமெரா ஜிடிஎஸ் மாடலில் வி8 என்ஜின் 473 பிஹெச்பி பவர், 620 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

டர்போ எஸ்இ ஹைப்ரிட் வேரியண்ட் வி8 பை-டர்போ மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை இணைந்து 552 பிஹெச்பி பவர், 750 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதனுடன் வழங்கப்பட்டுள்ள 17.9 கிலோவாட் பேட்டரி புல் எலெக்ட்ரிக் மோடில் 59 கிலோமீட்டர்கள் வரை செல்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com