2021 கியா செல்டோஸ் இந்தியாவில் அறிமுகம்

இரண்டு புது நிறங்கள் மற்றும் 17 புது அம்சங்களுடன் 2021 கியா செல்டோஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
கியா செல்டோஸ்
கியா செல்டோஸ்
Published on

கியா நிறுவனத்தின் 2021 செல்டோஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் துவக்க விலை ரூ 9.95 லட்சம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.65 லட்சம் ஆகும். டிசைன் மற்றும் ஸ்டைலிங்கை பொருத்தவரை புது கியா செல்டோஸ் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கியா எஸ்பி கான்செப்ட் ஆக அறிமுகம் செய்யப்பட்ட செல்டோஸ் மாடல் 2019 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. பின் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இடம்பிடித்தது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பின் 2021 மால் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த மாடல் புது லோகோவுடன் அறிமுகமாகி இருக்கிறது. இதுதவிர இரண்டு புது வேரியண்ட் மற்றும் 17 புது அம்சங்களை 2021 செல்டோஸ் மாடல் கொண்டிருக்கிறது. புது லோகோ காரின் பொனெட் பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கிறது. 

2021 கியா செல்டோஸ் மாடலில் ஒரு டீசல், இரண்டு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் IVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com