பயணிகள் வாகனங்கள் விற்பனை ஒரு சதவீதம் உயர்வு

கடந்த நவம்பர் மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை ஒரு சதவீதம் உயர்ந்துள்ளதாக மோட்டார் வாகன டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஹோண்டா சிட்டி
ஹோண்டா சிட்டி
Published on

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த நவம்பர் மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை பற்றி வாகன டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு புள்ளிவிவரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இந்திய சந்தையில் நவம்பர் மாதத்தில், ஒட்டுமொத்த அளவில் 21,05,508 மோட்டார் வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 20,54,296-ஆக இருந்தது. அந்த வகையில் வாகனங்கள் விற்பனை 2 சதவீதம் வளர்ச்சியடைந்து இருக்கிறது. 

இதே காலத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும் வர்த்தக வாகனங்கள் விற்பனை 8 சதவீதம் சரிவடைந்து 77,394-ஆக உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அது 83,040-ஆக இருந்தது. 

இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனை 3 சதவீதம் முன்னேறி (16,60,082-ல் இருந்து) 17,05,495-ஆக அதிகரித்து இருக்கிறது. மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 20 சதவீதம் அதிகரித்து 65,348- ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளன.

கடந்த பல மாதங்களாக மோட்டார் வாகனங்கள் விற்பனை சரிவை சந்தித்து வந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு தேவைப்பாடு உயர்ந்ததால் நவம்பர் மாதத்தில் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

நவம்பர் மாதத்தில் மாருதி சுசுகி 1,41,834 வாகனங்களை தயாரித்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 1,35,946-ஆக இருந்தது. அந்த வகையில், உற்பத்தி 4.33 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒன்பது மாதங்களுக்கு பின் அதன் உற்பத்தி அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com