1016 ஹெச்பி பவர் கொண்ட ஃபெராரி சூப்பர் கார் அறிமுகம்!

ஃபெராரி ஸ்பைடர் மாடலில் ஹார்டு டாப் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து 233 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகின்றன.
1016 ஹெச்பி பவர் கொண்ட ஃபெராரி சூப்பர் கார் அறிமுகம்!
Published on

ஃபெராரி நிறுவனம் SF90 ஹைப்ரிட், SF90 XX ஸ்டிராடேல் மற்றும் ஸ்பைடர் மாடல்களின் ப்ரோடக்ஷன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த கார்கள் முறையே 799 மற்றும் 599 யூனிட்கள் தான் உற்பத்தி செய்யப்பட உள்ளன. 2005-ம் ஆண்டு அறிமுகம் செய்ப்பட்ட XX மாடல்களில் புதிய வேரியண்ட் இது ஆகும்.

முந்தைய மாடல்களை போன்று இல்லாமல், புதிய மாடல்கள் சாலையில் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்று இருக்கின்றன. இதுதவிர முற்றிலும் புதிய XX சீரிஸ் மாடல்களில் ஏரோடைனமிக் அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இவற்றின் திறன் அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த காரின் பின்புறம் மெல்லிய லைட்பார், பம்ப்பரில் டிஃப்யுசர் மற்றும் பல்வேறு வென்ட்கள் வழங்கப்படுகிறது. இவை கார் என்ஜினில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும். ஸ்பைடர் மாடலில் ஹார்டு டாப் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை கார் 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போது 14 நொடிகளில் திறந்து, மூட முடியும்.

இதன் ஹைப்ரிட் என்ஜின் 1016 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. வி8 என்ஜின் 786 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து 233 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகின்றன. இந்த யூனிட் உடன் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com