

அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் அறிமுகத்திற்கு முன்னதாக, டாடா மோட்டார்ஸ் தனது புதிய தலைமுறை வாகனத்தை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. இந்த முறை, ஸ்பை படங்கள் வரவிருக்கும் நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த எஸ்.யூ.வி.யின் உட்புறத்தின் முக்கிய விவரங்களை வெளிப்படுத்தி, அதன் தோற்றத்தை காட்டுகின்றன.
படங்களில் காணப்படுவது போல், புதிய டாடா நெக்சான் சோதனை வாகனத்தில், தற்போதைய காரில் உள்ள அதே ஒளிரும் டாடா லோகோவுடன் கூடிய 2-ஸ்போக் மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல், பெரிய தனித்த தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய மற்றும் பெரிய முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் ஆட்டோ டிம்மிங் ஐ.ஆர்.வி.எம். ஆகியவை இடம்பெற்றுள்ளன.
வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரை, ஹெட்லைட்கள் போன்ற தற்காலிக பாகங்களை கொண்டு பார்க்கும்போது, நெக்சான் சோதனை வாகனம் இன்னும் உற்பத்திக்கு முந்தைய கட்டத்திலேயே இருப்பது போல் தெரிகிறது. இருப்பினும், அலாய் வீல்களுக்கான ஒரு புதிய வடிவமைப்பையும், பின்புறத்தில் ஒரு புதிய LED விளக்கு அமைப்பு இருக்கலாம்.
மற்றொரு குறிப்பிடத்தக்க அப்டேட் என்னவெனில், பின்புற அச்சில் டிஸ்க் பிரேக்குகள் சேர்க்கப்பட்டிருப்பதுதான்; முந்தைய காரில் டிரம் பிரேக் அமைப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
என்ஜினை பொறுத்தவரை, 2027 டாடா நெக்சான் மாடலில், 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல், 1.5-லிட்டர் டீசல் மற்றும் CNG உடன் இணைக்கப்பட்ட 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இதே என்ஜின் ஆப்ஷன்கள் தான் தற்போதைய மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற ஒரு மேம்படுத்தல் EV மாடலுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் இரண்டு மாடல்களும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.