

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது GLC EV மாடலை இந்தியாவில் ரூ. 78.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் விற்பனைக்கு உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் மாடல்களில் மிகச்சிறிய மின்சார வாகனம் இதுவாகும்.
மேலும், இது புனேவுக்கு வெளியே உள்ள ஜெர்மன் வாகன உற்பத்தியாளரின் ஆலையில் உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படுகிறது. இந்த காருக்கான முன்பதிவுகள் அக்டோபர் மாதம் தொடங்கின.
இந்திய சந்தையில் இந்த எஸ்யூவி, GLC400 என்ற பெயரில் கிடைக்கிறது. இது 94kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் ஒரே சார்ஜில் WLTP அடிப்படையில் 711 கி.மீ. தூரம் வரை செல்லும் என கூறப்படுகிறது. DC ஃபாஸ்ட் சார்ஜரில் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், கூடுதலாக 300 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும் என மெர்சிடிஸ் கூறுகிறது.
இதன் இரட்டை மோட்டார் அமைப்பு 482.4bhp மற்றும் 800Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது, இது அதன் பிரிவில் மிகவும் சக்திவாய்ந்த வாகனங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதன் நீளம் 4.85 மீட்டராகவும், வீல்பேஸ் 2.97 மீட்டராகவும் உள்ளது, இது அதன் பிரிவு மற்றும் வகையிலேயே மிகப்பெரிய வாகனங்களில் ஒன்றாக அமைகிறது.
GLC எலக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்களில் MBUX ஹைப்பர்ஸ்கிரீன், டால்பி அட்மாஸுடன் கூடிய பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங், பனோரமிக் கிளாஸ் ரூஃப், முன் இருக்கை பயணிகளுக்கான வென்டிலேட்டெட் மற்றும் மசாஜ் வசதி, முழு-LED லைட் பேக்கேஜ், பவர்-ஃபோல்டிங் இரண்டாம் வரிசை இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் பேட்கள், லெவல் 2 ADAS, ஆட்டோ-பார்க் வசதி, மற்றும் 128-லிட்டர் ஃபிரங்குடன் கூடிய 570-லிட்டர் பூட் ஆகியவை அடங்கும்.
வடிவமைப்பைப் பொறுத்தவரை, இந்திய சந்தையில் கிடைக்கும் GLC EV, எலக்ட்ரிக் AMG கிரில், 20-இன்ச் AMG ஸ்பெக் வீல்கள், அலுமினியம் ரன்னிங் போர்டுகள் மற்றும் கனெக்டெட் டெயில் லேம்ப்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய AMG டிசைன் பேக்குடன் வருகிறது.
புதிய பென்ஸ் எலெக்ட்ரிக் கார் 2027 பி.எம்.டபிள்யூ. iX3 எஸ்.யூ.வி. மாடலுக்கு போட்டியாக அமைகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏற்கனவே 1,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது, மேலும் மார்ச் 2027 வரை இந்த கார் விற்றுத் தீர்ந்துவிட்டது. விநியோகங்கள் ஏற்கனே தொடங்கிவிட்டன.