உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்பட்ட டிஃபெண்டர் மாடல்: ரூ. 99 லட்சம் தொடக்க விலையில் அறிமுகம்

இந்த மாடல்கள் அனைத்தும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
Land Rover Defender 90
Published on: 

ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) இந்தியா, உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட டிஃபெண்டர் காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.

உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்பட்ட புதிய டிஃபெண்டர் மாடலின் ஆரம்ப விலை ரூ. 99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் 110 மாடல்களில், வாடிக்கையாளர்கள் மூன்று வேரியண்ட்கள் மற்றும் மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் இருந்து தேர்வு செய்யலாம். 90 மற்றும் 130 மாடல்கள் தொடர்ந்து CBU வடிவில் கிடைக்கின்றன.

என்ஜின் மற்றும் செயல்திறன்:

உள்நாட்டில் தயாரிக்கப்படும் இந்த டிஃபெண்டர், 2.0-லிட்டர் பெட்ரோல் என்ஜின், மற்றும் 3.0-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. P300, P400, மற்றும் D350 டிரிம்களில் உள்ள இந்த மாடல்கள் அனைத்தும், 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

அளவில் சிறிய பெட்ரோல் என்ஜின் 296bhp பவர் மற்றும் 400Nm டார்க் வெளிப்படுத்துகிறது. அதே சமயம் பெரிய 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 394bhp பவர் மற்றும் 550Nm டார்க் உற்பத்தி செய்கிறது. டீசல் என்ஜின் 346bhp பவர் மற்றும் 700Nm டார்க் வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

விலை விவரங்கள்:

டிஃபெண்டர் 110 2.0 பெட்ரோல் எக்ஸ்-டைனமிக் HSE: ரூ. 99 லட்சம்

டிஃபெண்டர் 110 3.0 பெட்ரோல் எக்ஸ்-டைனமிக் HSE: 1.18 கோடி

டிஃபெண்டர் 110 3.0 டீசல் எக்ஸ்-டைனமிக் HSE: ரூ. 1.18 கோடி

(அனைத்தும், எக்ஸ்-ஷோரூம் விலைகள்)

இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110-இன் முழுமையாக அசெம்பிள் செய்யப்பட்ட (CBU) மாடல்களின் ஆரம்ப விலை ரூ. 1.35 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். கூடுதல் அம்சங்களை சேர்க்கும்போது, ​​விலை ரூ. 17 லட்சம் வரை கூடுதலாக இருக்கும்.

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தற்போது உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்படும் அதன் அனைத்து மாடல்களிலும் 29 அம்சங்களை ஸ்டாண்டர்டாக வழங்கியுள்ளதுடன், விலையையும் குறைத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com