முற்றிலும் புதிய ஆடி Q9 விலை விவரங்கள் அறிவிப்பு - இந்திய வெளியீடு எப்போ தெரியுமா?

இந்த கார் 7 இருக்கைகள் கொண்ட வடிவில் கிடைக்கிறது.
Audi Q9
Published on

ஆடி நிறுவனம் தனது முற்றிலும் புதிய Q9 மாடலின் பிரிட்டன் விலை விவரங்களை அறிவித்துள்ளது. அதன்படி ஆடியின் ஃபுல் சைஸ் எஸ்யூவி மாடலான Q9 பிரிட்டனில் 103,900 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1.18 கோடி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடலின் விநியோகம் வருகிற நவம்பர் மாதம் துவக்க இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த கார் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது.

5310மிமி நீளம், 2210மிமி அகலம் மற்றும் 1810 மிமி உயரம் என ஆடி நிறுவனத்தின் மிகப்பெரிய ப்ரொடக்ஷன் மாடல் என்ற பெருமையை புதிய Q9 பெற்றிருக்கிறது. இந்த காரின் வீல்பேஸ் 3140மிமி அளவில் உள்ளது. இந்த கார் 7 இருக்கைகள் கொண்ட வடிவில் கிடைக்கிறது.

சக்திவாய்ந்த என்ஜின்:

பிரிட்டனில் இந்த மாடல் 3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் என ஒற்றை பவர்டிரெய்ன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இந்த யூனிட் 300 ஹெச்.பி. பவர் மற்றும் 630 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

இத்துடன் 8-ஸ்பீடு டிப்டிரோனிக் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் வழங்கப்படுகிறது. மேலும், இந்த யூனிட் உடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

இந்திய வெளியீடு:

இந்திய சந்தையில் புதிய Q9 மாடல் ஆடி Q7 மாடலின் மேல் ஃபிளாக்ஷிப் எஸ்.யூ.வி. மாடலாக நிலைநிறுத்தப்படும். இந்த காரின் அறிமுகத்தை ஒட்டி ஆடி இந்தியா தனது எஸ்.யூ.வி. மாடல்களை ரிப்ரெஷ் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த காரின் வரிசையில், புதிய தலைமுறை ஆடி Q3 மாடலும் சில மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அளவில் பெரிய ஆடம்பர எஸ்.யூ.வி. மாடல் என்ற வகையில், புதிய ஆடி Q9 இந்திய சந்தையில் பி.எம்.டபிள்யூ. X7 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.எஸ். மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com