2023 ஃபோக்ஸ்வேகன் ID.3 வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 2023 ID.3 மாடலில் ஸ்டைலிங் அப்டேட்கள், புதிய 12 இன்ச் டச் ஸ்கிரீன் வழ்கப்படுகிறது. புதிய ID.3 மாடலின் வினியோகம் இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கும் என ஃபோக்ஸ்வேகன் அறிவித்து இருக்கிறது.
2023 ஃபோக்ஸ்வேகன் ID.3 வெளியீட்டு தேதி அறிவிப்பு
Published on

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய மேம்பட்ட ID.3 மாடலின் டிசைன் வரைபடங்களை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டு இருந்தது. இந்த மாடல் 2023 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில், புதிய 2023 ஃபோக்ஸ்வேகன் ID.3 மாடல் மார்ச் 1 ஆம் தேதி சர்வேதச சந்தையில் அறிமுகமாகும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் கார் - ID.3 ப்ரோ எனும் பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய டீசர்களின் படி புதிய ID.3 மாடல்- ID.3 ப்ரோ லைஃப், ID.3 ப்ரோ பிஸ்னஸ், ID.3 ப்ரோ ஸ்டைல் மற்றும் ID.3 ப்ரோ மேக்ஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. டீசர் வீடியோவில் புதிய எலெக்ட்ரிக் ஹேச்பேக்-இன் டெயில் லைட் டிசைன் இடம்பெற்று இருக்கிறது.

தற்போதைய டீசரில் புதிய ஃபோக்ஸ்வேகன் காரின் டிசைன் சற்றே மாற்றப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளன. ஃபோக்ஸ்வேகன் ID.3 இரண்டாம் தலைமுறை மாடல் என்ற போதிலும், இதன் டிசைன் வரைபடங்கள் மூலம் இது மிட்-சைக்கிள் ஃபேஸ்லிஃப்ட் ஆக இருக்கும் என்றே தெரிகிறது.

வரைபடங்களில் புதிய கார் வெளிப்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரியவந்துள்ளது. இதன் கேபின் பகுதியில் புதிய 12 இன்ச் டச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இதன் ஒட்டுமொத்த டிசைன் தற்போது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. 2023 ID.3 மாடல் அதிநவீன மென்பொருள் கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com