இந்தியாவில் உற்பத்தியாகும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி மாடல்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி
மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி
Published on

ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் உற்பத்தியாளரான மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் ஏஎம்ஜி மாடல்களை உற்பத்தி செய்ய துவங்கி இருக்கிறது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகளவு ஊக்குவிக்கும் முதல் நிறுவனமாக மெர்சிடிஸ் பென்ஸ் இருக்கிறது.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி  ஜிஎல்சி 43 4மேடிக் கூப் மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளியாகும் முதல் சீரிஸ் ஆகும். தற்சமயம் மெர்சிடிஸ் நிறுவனம் 19 மாடல்களை சிகேடி முறையில் பூனேவின் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்து வருகிறது.

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி சீரிசில் 43, 53, 63 மற்றும் ஜிடி சீரிஸ் உள்ளிட்ட மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை வெவ்வேறு பாடி ஸ்டைல்களை கொண்டிருக்கிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com