புதிய அம்சத்துடன் மாருதி சுசுகி இக்னிஸ் அறிமுகம்

மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் மாடல் புதிய அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மாருதி சுசுகி இக்னிஸ்
மாருதி சுசுகி இக்னிஸ்
Published on

மாருதி சுசுகி நிறுவனம் தனது இக்னிஸ் ஹேட்ச்பேக் மாடல்களின் சீட்டா வேரியண்ட்டில் ஸ்மார்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்க துவங்கி உள்ளது. இதனால் இந்த வேரியண்ட் விலை ரூ. 8500 அதிகமாகி உள்ளது. 

மாருதி இக்னிஸ் சீட்டா மாடல் எம்டி மற்றும் ஏஎம்டி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 5.98 லட்சம் மற்றும் ரூ. 6.45 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

முன்னதாக 7 இன்ச் ஸ்மார்ட்பிளே தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆல்ஃபா வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. 

மாருதி சுசுகி இக்னிஸ் மாடலில் 1.2 லிட்டர், 4 சிலிண்டர் விவிடி பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 82 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஏஎம்டி யூனிட் உள்ளிட்ட ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com