இணையத்தில் வெளியான எர்டிகா டீசல் டூர் எம் மாடல் ஸ்பை படங்கள்

மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா டீசல் டூர் எம் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
மாருதி எர்டிகா
மாருதி எர்டிகா
Published on

மாருதி சுசுகி எர்டிகா கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த மாடல் பிஎஸ்6 டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.  

இந்தியாவில் பிஎஸ்6 விதிகள் அமலான சமயத்தில் மாருதி சுசுகி நிறுவனம் தனது மாடல்களில் வழங்கப்பட்டு இருந்து டீசல் என்ஜின் ஆப்ஷன்களை நீக்கியது. 

அந்த வகையில் இணையத்தில் வெளியாகி இருக்கும் ஸ்பை வீடியோவில் எர்டிகா டூர் எம் வேரியண்ட் ஹரியாணாவில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.  மேலும் இதன் பக்கவாட்டில் டிடிஐஎஸ் பேட்ஜிங் காணப்படுகிறது. வீடியோவில் காரின் சத்தத்தை கொண்டு இதில் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது.

முந்தைய எர்டிகா எம்பிவி மாடல் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருந்தது. இது 94 பிஹெச்பி பவர், 225 என்எம் டார்க் செயல்திறன் வழங்கியது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com