ஸ்கார்பியோ டாப் எண்ட் மாடல்களில் புது வசதி

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் டாப் எண்ட் மாடல்களில் வழங்ககப்பட இருக்கும் புது வசதி பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா ஸ்கார்பியோ
மஹிந்திரா ஸ்கார்பியோ
Published on

மஹிந்திரா நிறுவனத்தின் பிஎஸ்6 ரக ஸ்கார்பியோ மாடல் ஏப்ரல் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. எஸ்5, எஸ்7, எஸ்9 மற்றும் எஸ்11 என நான்கு வேரியண்ட்களில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்சமயம் இதன் டாப் எண்ட் எஸ்9 மற்றும் எஸ்11 வேரியண்ட்களின் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளை வழங்குகிறது. இந்த அம்சங்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

இதுதவிர புதிய ஸ்கார்பியோ மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஸ்கார்பியோ பிஎஸ்6 மாடலில் 2.2 லிட்டர் எம்ஹாக், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த என்ஜின் 40 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ பிஎஸ்6 பேஸ் மாடலின் விலை ரூ. 11.98 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.52 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com