சோதனையில் சிக்கிய ஹூன்டாய் எக்ஸென்ட் நியோஸ்

ஹூன்டாய் நிறுவனத்தின் எக்ஸென்ட் நியோஸ் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஹூன்டாய் எக்ஸென்ட்
ஹூன்டாய் எக்ஸென்ட்
Published on

ஹூன்டாய் எக்ஸென்ட் நியோஸ் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய கார் கிராண்ட் ஐ10 நியோஸ் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஸ்பை புகைப்படங்களில் காரின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிகளவு மறைக்கப்பட்டுள்ளது. எனினும், புதிய செடான் காரில் பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இத்துடன் லெதர் இருக்கைகள், புதிய டேஷ்போர்டு வடிவமைப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

புதிய காரின் ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் மற்றும் வெளிப்புற வடிவமைப்புகள் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலை தழுவி உருவாக்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய காம்பேக்ட் செடான் காரில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டி.ஆர்.எல்., எல்.இ.டி. டெயில் லேம்ப் மற்றும் இன்டிகேட்டர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

தற்சமயம் விற்பனை செய்யப்படும் எக்ஸென்ட் கார்: 82 பி.ஹெச்.பி. பவர், 114 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினும், 74 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனல் 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

புதிய எக்ஸென்ட் நியோஸ் மாடலில் பி.எஸ். 6 ரக என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதே போன்ற என்ஜின் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் தற்போதைய எக்ஸென்ட் மாடலை போன்றே இருக்கும். இத்துடன் 5-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.

புகைப்படம் நன்றி: Rushlane

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com