ரூ.4.02 கோடியில் ஃபெராரி எஃப் 8 டிரிபியூடோ

ஃபெராரி நிறுவனத்தின் புதிய எஃப்8 டிரிபியூடோ கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
2020 ஃபெராரி எஃப் 8 டிரிபியூடோ
2020 ஃபெராரி எஃப் 8 டிரிபியூடோ
Published on

ரேஸ் கார்கள் என்றாலே ஃபெராரியை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. இந்நிறுவனம் தற்போது ‘எப்ஃ8 டிரிபியூடோ’ மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.4.02 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது இது வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிறுவனம் ஹைபிரிட் மாடல் அல்லாத கடைசி காராக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

புதிய ஃபெராரி காரில் 3.9 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜ்டு வி 8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 720 ஹெச்.பி. திறனையும் 770 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையும் கொண்டது. இதை ஸ்டார்ட் செய்து 2.9 வினாடி நேரத்திற்குள் 100 கி.மீ. வேகத்தை தொட்டுவிடலாம். 200 கி.மீ. வேகத்தை 7.8 வினாடிக்குள் எட்டிவிடும். 

இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 340 கிலோ மீட்டராகும். இது பார்ப்பதற்கு முந்தைய 488 மாடலைப் போலவே உள்ளது. இருப்பினும் எஸ்டக்ட் இன்டேக், முகப்பு விளக்கு அமைப்பு, பின்பகுதியில் விளக்கு அமைப்பு ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com