காருக்கு ரூ. 6.95 லட்சம் தள்ளுபடி - ஆர்டர் போட்டீங்களா?

வால்வோ நிறுவன கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிப்பு. கார்களுக்கு குறுகிய கால சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
காருக்கு ரூ. 6.95 லட்சம் தள்ளுபடி - ஆர்டர் போட்டீங்களா?
Published on

வால்வோ இந்தியா நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட வாகனங்களுக்கு குறுகிய காலக்கட்டத்திற்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கி வருகிறது. அதன்படி வால்வோ XC60 மற்றும் வால்வோ XC40 ரிசார்ஜ் போன்ற மாடல்களுக்கு "ஃபெஸ்டிவ் டிலைட்" சலுகைகளின் கீழ் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சலுகை விவரங்கள்:

வால்வோ XC60 மாடலுக்கு ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் வால்வோ XC60 விலை ரூ. 67 லட்சத்து 85 ஆயிரத்தில் இருந்து ரூ. 60 லட்சத்து 90 ஆயிரம் என்று குறைந்து இருக்கிறது. வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 78 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகை வழங்கப்படுகிறது.

முன்னதாக வால்வோ நிறுவனம் தனது XC40 ரிசார்ஜ் மாடலின் கூப் வெர்ஷனாக வால்வோ C40 ரிசார்ஜ் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 61 லட்சத்து 25 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் இந்த எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com