கார்களுக்கு ரூ. 1.40 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் வோக்ஸ்வேகன்

அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. 2024 மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.
கார்களுக்கு ரூ. 1.40 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் வோக்ஸ்வேகன்
Published on

வோக்ஸ்வேகன் விற்பனை மையங்கள் சார்பில் விர்டுஸ், டைகுன் மற்றும் டிகுவான் மாடல்களுக்கு சிறப்பு சலுககள் வழங்கப்படுகின்றன. மே மாத சலுகைகளின் கீழ் வழங்கப்படும் சிறப்பு சலுகை மற்றும் பலன்கள் ஒவ்வொரு பகுதி மற்றும் ஸ்டாக் இருப்புக்கு ஏற்ப வேறுப்படும்.

அந்த வகையில், வோக்ஸ்வேகன் விர்டுஸ் மிட்சைஸ் செடான் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 90 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 30 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 20 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகிறது. இவை 2023 மாடல்களுக்கானது ஆகும். 2024 மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

வோக்ஸ்வேகன் டைகுன் மாடலை வாங்குவோருக்கு ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. வேரியண்டிற்கு ஏற்ப டைகுன் மாடலை வாங்கும் போது ரூ. 65 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 30 ஆயிரம் வரை எக்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 20 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகின்றன.

2023 டிகுவான் எஸ்.யு.வி. மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 75 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 75 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ் அடங்கும். இத்துடன் நான்கு ஆண்டுகளுக்கு சர்வீஸ் பேக்கேஜ் வழங்கப்படுகிறது. 2024 மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com