

டொயோட்டா நிறுவனம் இன்னோவா கிரிஸ்டா லிமோ எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய இன்னோவா க்ரிஸ்டா லிமோ எடிஷன் மாடலின் விலை ரூ. 19.95 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய லிமோ எடிஷன் GX ஃப்ளீட் 7- மற்றும் 8-சீட் ஆப்ஷன்களில் கிடைக்கும்; இதில் 8-சீட் ஆப்ஷனின் விலை ரூ. 19.99 லட்சம் ஆகும், இது ஸ்டாண்டர்ட் 7-சீட் மாடலை விட ரூ. 5,000 அதிகம். இந்த லிமோ எடிஷன், ஃப்ளீட் வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டுள்ளது மற்றும் GX ஃப்ளீட் 7-சீட் வேரியண்டில் கேப்டன் சீட்களை கொண்டுள்ளது.
GX ஃப்ளீட் மாடல், GX SLF கிரேடை அடிப்படையாக கொண்டது. டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, GX, GX+, VX மற்றும் ZX வேரியண்ட்களிலும் கிடைக்கிறது.
இந்த லிமோ எடிஷன், பிரத்தியேகமாக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்ட 2.4-லிட்டர் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த என்ஜின் ஒரு லிட்டருக்கு 15 கி.மீ. மைலேஜ் தரும் என கூறப்படுகிறது.
இதன் சிறப்பம்சங்களை பொறுத்தவரை, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 8-இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மேனுவல் ஏர் கண்டிஷனிங், மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே மற்றும் ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கண்ட்ரோல்கள் ஆகியவை இதில் உள்ளன.
இதில் 16-இன்ச் அலாய் வீல்கள், ஒருங்கிணைந்த டர்ன் இண்டிகேட்டர்களுடன் கூடிய பாடி-கலர் ORVM-கள் மற்றும் ஏழு ஏர்பேக்குகள், அத்துடன் ABS, EBD, பிரேக் அசிஸ்ட், வெஹிக்கிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் ஆகிய அம்சங்களும் உள்ளன.
இந்த கார் 3 ஆண்டுகள்/1,00,000 கி.மீ. நிலையான வாரண்டியுடன் வருகிறது, இதை 5 ஆண்டுகள்/2,20,000 கி.மீ. வரை நீட்டிக்கவும் முடியும்.