லெவல் 2 ADAS, புதிய என்ஜினுடன் கிளான்ஸா பேஸ்லிப்ட் இந்தியாவில் அறிமுகம்

புதிய டொயோட்டா கிளான்ஸா பேஸ்லிப்ட் மாடல் ஐந்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
Toyota Glanza Facelift
Published on: 

டொயோட்டா நிறுவனம், கிளான்ஸா பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கிளான்ஸா பேஸ்லிப்ட் மாடலின் விலை ரூ. 6.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட 2026 பலேனோவை அடிப்படையாகக் கொண்ட இந்த ஹேட்ச்பேக், மாற்றியமைக்கப்பட்ட முன்பகுதி, உபகரண பட்டியலில் சில கூடுதல் அம்சங்கள் மற்றும் புதிய 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆகியவற்றைப் பெற்றுள்ளது.

புதிய மாற்றங்கள்:

வடிவமைப்பு மாற்றங்கள் முன்பக்கத்தில் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. கிளான்ஸாவில் இப்போது ஒரு பெரிய கிரில் மற்றும் எல்.இ.டி. ஃபாக் லைட்களுக்கான மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப், 15-இன்ச் அலாய் வீல்களின் வடிவமைப்பு மாற்றமின்றி தொடர்கின்றன.

காரின் உள்புறம் அதே பிளாக் மற்றம் பெய்ஜ் தீம் தொடர்கிறது, ஆனால் அம்சங்களின் பட்டியல் விரிவடைகிறது. முந்தைய காரை விட, கிளான்ஸாவில் இப்போது முன் இருக்கைகளுக்கான கூலிங் வசதி, வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் லெவல் 2 ADAS செயல்பாடுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த ஹேட்ச்பேக், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 9-இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, யு.எஸ்.பி. போர்ட்கள் மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் ஆகியவற்றை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

புதிய என்ஜின்:

2026 கிளான்ஸா பேஸ்லிப்ட் மாடலின் மிகப்பெரிய மாற்றம் பானட்டின் கீழ் உள்ளது. கிளான்ஸா இப்போது பலேனோவின் 1.2-லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை பயன்படுத்துகிறது. இந்த யூனிட் 82bhp பவர், 113Nm டார்க் வெளிப்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன் CNG ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட கிளான்ஸா மாடல்: E, S, G, V மற்றும் V(O) ஆகிய ஐந்து வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் தொடர்ந்து டாடா அல்ட்ரோஸ், ஹூண்டாய் i20 மற்றும் மாருதி சுசுகி பலேனோ ஆகிய மாடல்களுடன் போட்டியிடுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com