மாருதி சுசுகி பலேனோ பேஸ்லிப்ட் முன்பதிவு துவக்கம் ?

மாருதி சுசுகி நிறுவனத்தின் மேம்பட்ட பலேனோ பேஸ்லிப்ட் மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி பலேனோ
மாருதி சுசுகி பலேனோ
Published on

மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் மேம்பட்ட பலேனோ பேஸ்லிப்ட் மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முந்தைய தகவல்களின் படி புதிய பலேனோ பேஸ்லிப்ட் மாடல் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய பலேனோ பேஸ்லிபிட் மாடல் மார்ச் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

இதுதவிர புதிய பலேனோ மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது மாருதி சுசுகி அறிவிப்பின்றி விற்பனையாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் ஆகும். சமீபத்தில் இந்த மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகின. அதன்படி பலேனோ பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் மாற்றப்பட்டு இருக்கிறது.

மேலும் புதிய மாடலில் அகலமான முன்புற கிரில், ரி-டிசைன் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் யூனிட்கள், புதிய அலாய் வீல்கள், ஸ்ப்லிட் எல்.இ.டி. டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கடந்த வாரம் மாருதி சுசுகி நிறுவனம் புதிய  பலேனோ மாடலுக்கான உற்பத்தி பணிகளை துவங்கியது. 

உபகரணங்களை பொருத்தவரை பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரூயிஸ் கணட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் வீல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com