இந்தியாவில் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் எலெக்ட்ரிக் புக்கிங் தொடக்கம் - முழு விவரம்!

இந்த மின்சார ரேன்ஜ் ரோவர் மாடல் முழு சார்ஜ் செய்தால் 500-க்கும் அதிக கி.மீ. செல்லும் திறன் கொண்டுள்ளது.
Range Rover Sport Electric
Published on: 

லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் அதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளன.

இந்த சொகுசு மின்சார வாகனம், அனைத்து நிலப்பரப்புகளிலும் செல்லக்கூடிய எஸ்யூவி (SUV) என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள், செயல்திறன்:

ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் எலக்ட்ரிக் காரில் இன்டெலிஜென்ட் டிராக்‌ஷன் மேனேஜ்மென்ட், விர்ச்சுவல் ஆல்-வீல் டிரைவ் (AWD), ஏர் சஸ்பென்ஷன், எலக்ட்ரானிக் ஆக்டிவ் ரோல் கண்ட்ரோல் (eARC) மற்றும் ஆல்-வீல் ஸ்டீயரிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் எலக்ட்ரிக் கார் 542.5bhp பவர் மற்றும் 850Nm டார்க் வெளிப்படுத்தும் மோட்டார் உடன் வருகிறது.

புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் எலெக்ட்ரிக் மாடலில் 118.5kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இதன் கூறப்படும் ரேஞ்ச் 609 கிலோமீட்டர்கள் ஆகவும், விளம்பரப்படுத்தப்பட்ட உண்மையான ரேன்ஜ் 533 கிலோமீட்டர்களாகவும் உள்ளது.

இந்த மின்சார காருக்கான வாரண்டி எட்டு ஆண்டுகள்/1,60,000 கி.மீ. வரை வழங்கப்படுகிறது. இந்த பேட்டரி 800V கட்டமைப்பின் மீது உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 22 நிமிடங்களில் பேட்டரியை 10-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.

வேரியண்ட் லிஸ்ட்:

இந்த பேட்டரி பேக், பல-அச்சு அதிர்வுகள் மற்றும் -45°C முதல் 90°C வரையிலான வெப்ப அதிர்ச்சிகள் போன்ற சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த SUV, Dynamic SE, Dynamic HSE, Autobiography மற்றும் First Edition ஆகிய பதிப்புகளில் கிடைக்கிறது.

இதன்் First Edition மாடல் சடார் கிரே, சாட்டின் ராப், பிளாக் காண்டிராஸ்ட் ரூஃப் மற்றும் 22-இன்ச் டயர்களுடன் வருகிறது. ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் எலெக்ட்ரிக் Autobiography வாடிக்கையாளர்களுக்கு பிஸ்போக் கமிஷனிங் சேவையும் கிடைக்கிறது, இது கிட்டத்தட்ட வரம்பற்ற வண்ணங்கள் மற்றும் மெட்டீரியல்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com