அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகமான 2nd Gen கியா செல்டோஸ்

புதிய செல்டோஸ், அதன் முந்தைய மாடலை போலவே, மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு MT அல்லது 6-ஸ்பீடு AT உடன் வழங்கப்படலாம்.
அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகமான 2nd Gen கியா செல்டோஸ்
Published on

கியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2nd Gen கியா செல்டோஸ் 2026 ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகமாவதற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. புதிய தலைமுறை செல்டோஸ் மாடல் மூன்று என்ஜின் ஆப்ஷன்கள், நான்கு வேரியண்ட்கள் - HTE, HTK, HTX, GT-Line மற்றும் X-Line வழங்கப்படுகிறது. இந்த காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிய நிலையில் ஜனவரி 2-ந்தேதி விலை அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

புதிய தலைமுறை செல்டோஸ் மாடல் சமீபத்திய கியாவின் டைகர் நோஸ் கிரில் மற்றும் முற்றிலும் புதிய பம்பருடன் முற்றிலும் புதிய முகத்தைப் பெறுகிறது. அதே நேரத்தில் பக்கவாட்டில் பாப்-அவுட் டோர் ஹேண்டில்கள் மற்றும் கேரன்ஸ் மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் EV மாடலில் உள்ளதை போலவே புதிய ஏரோ-ஓரியண்டட் சக்கரங்கள் உள்ளன. பின்புறம் கனெக்டெட் செங்குத்தான டெயில் லைட்களைப் பெறுகிறது. இது காருக்கு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது.

புதிய கியா செல்டோஸ் உள்புறத்தில் புதிய சென்டர் கன்சோல், பிரமாண்டமான 12.3-இன்ச் ஸ்கிரீன்கள், புதிய 3-ஸ்போக் கியா ஸ்டீயரிங் வீல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. இந்த காரின் ஒட்டுமொத்த நீளம் 4.36 மீட்டரிலிருந்து 4.46 மீட்டராக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வீல்பேஸ் 2,690 மிமீ ஆக அதிகரித்துள்ளது, இது முந்தைய மாடலை விட 80 மிமீ அதிகம் ஆகும்.

இத்துடன் டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், போஸ் சவுண்ட் சிஸ்டம், லெவல்-2 ADAS, பனோரமிக் சன்ரூஃப், HUD, கனெக்டெட் கார் தொழில்நுட்பம், சரவுண்ட் லைட்கள், ஃபுல்-எல்இடி லைட் ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்கு 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல்மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.

புதிய செல்டோஸ், அதன் முந்தைய மாடலை போலவே, மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. அதன்படி 113bhp பவர், 144Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் NA பெட்ரோல் யூனிட். 158bhp பவர், 253Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் GDi யூனிட் உள்ளது. இத்துடன் 6-ஸ்பீடு MT வழங்கப்படுகிறது. டீசல் வேரியண்டில் கியாவின் 1.5 லிட்டர் யூனிட் 118bhp பவர் மற்றும் 260Nm டார்க் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு MT அல்லது 6-ஸ்பீடு AT உடன் வழங்கப்படலாம்.

முற்றிலும் புதிய இரண்டாம் தலைமுறை செல்டோஸ் மாடலின் விலை விவரங்களை கியா நிறுவனம் வருகிற ஜனவரி 2ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது. மேலும் இதன் விலை ரூ. 12 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சம் ரூ. 20 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திய சந்தையில் இந்த கார், ஹூண்டாய் கிரெட்டா, ஹோண்டா எலிவேட் , எம்ஜி ஆஸ்டர் , மாருதி விக்டோரிஸ் , மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹை-ரைடர், ஸ்கோடா குஷக் மற்றும் ஃவோக்ஸ்வாகன் டைகுன் போன்ற கார்களுக்கு போட்டியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com