Mini | மினி கூப்பர் S GP Inspired Edition இந்தியாவில் அறிமுகம்

மினி கூப்பர் S GP Inspired Edition மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
Mini | மினி கூப்பர் S GP Inspired Edition இந்தியாவில் அறிமுகம்
Published on

மினி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய மினி கூப்பர் S GP Inspired Edition மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 58.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது லிமிட்டெட் எடிஷன் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. பாரம்பரியம் மிக்க மினி GP மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கார் இந்திய சந்தையில் வெறும் 30 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கார் வழக்கமான கூப்பர் S மாடலை விட அதிக ஸ்போர்ட் மற்றும் ஆக்ரோஷமான தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் பிரத்யேக லெஜண்ட் கிரே ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்புறத்தில் ஜான் கூப்பர் வொர்க்ஸ் சார்ந்த பம்ப்பர் மற்றும் கிரில், சிவப்பு நிற விங்லெட்கள் மற்றும் சிவப்பு நிற டோ ஸ்டிராப் உள்ளது.

பக்கவாட்டில் GP Inspired பிரான்டிங் செய்யப்பட்டு, சி பில்லரில் 1 முதல் 30 வரையிலான எண்கள் பேட்ஜ் போன்று வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்போர்ட் சைடு ஸ்கர்ட்கள், ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், ரியர் விங்லெட்கள் மற்றும் ரியர் டிஃப்யூசர் வழங்கப்பட்டு இருக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை இந்த கரில் 9.4 இன்ச் வட்ட வடிவ OLED டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜிங், பானரோமிக் கிளாஸ் ரூஃப், ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், பவர்டு இருக்கைகள், ஆம்பியன்ட் லைட்டிங், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஹெட்-அப் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கு லெவல் 1 ADAS சூட், ரியர் வியூ கேமரா, ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்று்ம பல்வேறு ஏர்பேக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய மினி கூப்பர் S GP Inspired Edition மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 204 ஹெச்.பி. பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இ்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 242 கிலோமீட்டர்கள் வரை செல்லும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com