இன்விக்டோ மாடலின் விலையை திடீரென உயர்த்திய மாருதி

வேரியண்ட் தேர்வை பொறுத்து விலைகள் கூடவோ குறையவோ செய்துள்ளன.
Maruti Invicto
Published on

மாருதி சுசுகி நிறுவனம், ஆகஸ்ட் 2026 முதல் தனது வரிசையில் உள்ள பல மாடல்களின் விலையை உயர்த்தியது. முன்னதாக ஜிம்னி, இ-விட்டாரா, பலேனோ மற்றும் பிரெஸ்ஸா போன்ற மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது.

இந்த வரிசையில், தற்போது இன்னோவா ஹைக்ராஸின் ஒரு வகையான மாருதியின் இன்விக்டோ காரின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதில், வேரியண்ட் தேர்வை பொறுத்து விலைகள் கூடவோ குறையவோ செய்துள்ளன.

விலை மாற்றம்:

ஏழு இருக்கைகள் கொண்ட அடிப்படை ஜீட்டா+ ஹைப்ரிட் வேரியன்ட்டின் விலையில் ரூ. 3,000 குறைக்கப்பட்டு, இதன் ஆரம்ப நிலை விலை ரூ. 24.94 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்விக்டோ வரிசையில் உள்ள மற்ற இரண்டு மாடல்களான ஸீட்டா+ ஹைப்ரிட் 8S மற்றும் ஆல்ஃபா+ ஹைப்ரிட் 7S ஆகியவற்றின் விலை முறையே ரூ. 10,000 அதிகரித்துள்ளது.

இதனால், இந்த MPV-யின் விலை தற்போது ரூ. 24.94 லட்சம் முதல் ரூ. 28.70 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள்).

பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கும் ஹைக்ராஸ் போல் இல்லாமல், மாருதி சுசுகி இன்விக்டோ ஹைப்ரிட் மாடலில் மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த மாதம் இந்த மாடலின் ஒரு வேரியண்ட்டின் விலை மட்டும் ரூ. 25,000 உயர்த்தப்பட்டது .

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com