

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய வகை மின்சார ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனமான (eSUV) BE 6 SPORTEQ- ஐ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.
மஹிந்திரா நிறுவனம், புதிய ஸ்போர்டெக் சீரிஸ் மூலம் BE 6 வரிசையில் மறுவடிவமைக்கப்பட்ட கேபின் மற்றும் பேட்டரியை ஒரு சேவையாக (BaaS) வாங்கும் வசதி ஆகியவை அறிமுகம் செய்யவுள்ளது.
BaaS என்பது, வாடிக்கையாளர் பேட்டரி இல்லாமல் காரை வாங்கி, அதை தனியாக வாடகைக்கு எடுக்கும் ஒரு மாதிரி ஆகும். இது காரின் ஆரம்ப விலையைக் குறைக்கிறது.
BE 6 SPORTEQ, டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் ஆகிய இரண்டையும் கொண்ட இந்தியாவின் முதல் மின்சார வாகனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இது மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒரு உயர்தர பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.
இந்த வாகனத்தின் மூன்று திரைகளை கொண்ட முழுமையான காக்பிட், கூகுள் ஜெமினி மற்றும் ஓட்டுதலை மேலும் இணைக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமமில்லாமல் பயன்படுத்தும் வகையில் தனது முந்தைய வடிவத்தை மாற்றி அமைத்துள்ளது.
இது, ஒரு மின்சார SUV-யிடம் இருந்து வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் எல்லைகளை தொடர்ந்து விரிவுபடுத்தும் ஒரு உரிமையாளர் அனுபவத்தை வழங்குகிறது.
SPORTEQ தொடரில் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து புதிய தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் அம்சங்களும், தற்போதுள்ள BE 6, XEV 9e மற்றும் XEV 9S வாடிக்கையாளர்களுக்கு, ஜனவரி 2027 முதல் கட்டங்களாக வெளியிடப்பட உள்ளது.
இந்த வாகனம் குறித்து மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான வேலுசாமி கூறுகையில், “தங்கள் உரிமையாளர்களுடன் சேர்ந்து வளரும் வாகனங்களுக்கே எதிர்காலம் சொந்தமானது. SPORTEQ அதைச் செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் BE 6 SPORTEQ சீரிஸ் வாகனங்களின் விநியோகம் தொடங்க இருக்கிறது,” என்று அவர் கூறினார்.
BaaS மற்றும் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.3.75 செலவாகும் 59 kWh பேட்டரியுடன் இதன் ஆரம்ப விலை ரூ. 11.45 லட்சமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. BaaS இல்லாமல் இதன் விலை ரூ. 19.45 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.