ஹூண்டாய் கார் முன்பதிவு திடீர் நிறுத்தம் - வலைதளத்தில் இருந்தும் நீக்கம் - ஏன் தெரியுமா?

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது கார் மாடலுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை நிறுத்தி இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் சாண்ட்ரோ
ஹூண்டாய் சாண்ட்ரோ
Published on

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது சாண்ட்ரோ மாடலுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை நிறுத்தி இருக்கிறது. ஹூண்டாய் ஹேச்பேக் மாடலின் விலை இந்திய வலைதளத்தில் பட்டியலிடப்பட்டே இருக்கிறது. எனினும், சாண்ட்ரோ மாடல் ஹூண்டாய் வலைதளத்தின் ‘Click to Buy’  முன்பதிவு தளத்தில் இடம்பெறவில்லை. 

முன்னதாக இம்மாத துவக்கத்தில் ஹூண்டாய் சாண்ட்ரோ மாடல் விலை ரூ. 17 ஆயிரத்து 800 வரை அதிகரிக்கப்பட்டது. புது ஹேச்பேக் மாடலான சாண்ட்ரோ விற்பனை நிறுத்தம் பற்றி ஹூண்டாய் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், ஆன்லைன் தளம் போன்றே விற்பனை மையங்களிலும் இந்த மாடலுக்கான முன்பதிவுகள் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. 

இந்திய சந்தையில் 2018 வாக்கில் ரி-எண்ட்ரி கொடுத்த ஹூண்டாய் சாண்ட்ரோ எண்ட்ரி-லெவல் ஹேச்பேக் மாடலாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள், ரியர் ஏர்கான் வெண்ட்கள், கீலெஸ் எண்ட்ரி மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன. 

ஹூண்டாய் சாண்ட்ரோ மாடலின் விலை தற்போது ரூ. 4 லட்சத்து 89 ஆயிரம் என துவங்கி அதிகபட்சமாக ரூ. 6 லட்சத்து 41 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com