கார்கள் விற்பனை 11.3% உயர்வு

பிப்ரவரில் 3,73,177 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன கார்கள் விற்பனை பிப்ரவரியில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது
கார்கள் விற்பனை 11.3% உயர்வு
Published on: 

கடந்த ஆண்டு பிப்ரவரியில் கார்கள் 3,35,324 யூனிட்கள் விற்பனையாகி இருந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரில் 3,73,177 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. மேலும் கார்கள் விற்பனை பிப்ரவரியில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

தொழில்துறை மதிப்பீட்டின்படி இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் விற்பனையான 3,35,324 யூனிட்களை விட 11.3 சதவீதம் அதிகம். உள்நாட்டு சந்தையில் இதுவரை பதிவு செய்யப்பட்ட பயணிகள் வாகன விற்பனையில் 3-வது சிறந்த மாதமாக பிப்ரவரி அமைந்துள்ளது.

உள்ளூர் சந்தையில் விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனை பிப்ரவரியில் அதிகரித்துள்ளது. மஹிந்திரா வாகன விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் வாகனங்கள் மாதாந்திர விற்பனை 23,300 ஆக உள்ளது

X

Maalai Malar
www.maalaimalar.com