730 கிமீ ரேன்ஜ் வழங்கும் ஆடம்பர எம்பிவி கார் அறிமுகம் செய்த டென்சா - விலை மற்றும் முழு விவரங்கள்

புதிய டென்சா எம்பிவி கார் நான்குவித வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
Denza D9
Published on: 

BYD நிறுவனத்தின் சொகுசு துணை பிராண்டான டென்சா, இந்தியாவில் D9 மற்றும் Z9 GT ஆகிய இரண்டு கார்களை அறிமுகம் செய்துள்ளது . இதில் D9 ஒரு சொகுசு MPV ஆகும். இது MG M9, டொயோட்டா வெல்ஃபயர் , கியா கார்னிவல் , லெக்சஸ் LM மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் V-கிளாஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக விளங்குகிறது.

இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். அதிகாரப்பூர்வ டென்சா டீலர்ஷிப்களில் ரூ. 10 லட்சத்திற்கு முன்பதிவுகள் இப்போது தொடங்கியுள்ளன.

டென்சா D9 ரேன்ஜ் மற்றும் திறன்:

புதிய டென்சா D9-இன் மையத்தில், ஒரு ஒற்றை மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்ட 115 kWh பேட்டரி பேக் உள்ளது. இந்த யூனிட் 456bhp பவர் மற்றும் 365Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஆற்றல் முன் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 730 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகிறது.

டென்சா D9, வேல் சீ ப்ளூ, காஸ்மோஸ் பிளாக், ஸ்டாரி நைட் கிரே மற்றும் ஆர்டிக் ஒயிட் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கும். மேலும், பிரவுன், பேஜ் மற்றும் பிளாக் உட்பட மூன்று இன்டீரியர் தீம்களில் இருந்து தேர்வு செய்ய முடியும். D9 மற்றும் Z9 GT ஆகியவை குருகிராம், மும்பை, அகமதாபாத், பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு நகரங்களில் உள்ள அதிகாரப்பூர்வ டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.

டென்சா டி9 பின்புறத் தோற்றம்:

சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, 2026 D9 சொகுசு MPV-யில் இரண்டாம் வரிசைக்கான ஆர்ம்ரெஸ்ட் ஸ்கிரீன்கள், குளிரூட்டும் மற்றும் வெப்பமூட்டும் வசதி, பனோரமிக் சன்ரூஃப், மல்டி-மோட் மசாஜ் இருக்கைகள், 15.6-இன்ச் ஃப்ளோட்டிங் டச்-ஸ்கிரீன் யூனிட், 10.25-இன்ச் 3D இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ஆம்பியன்ட் லைட்டிங், 16-ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம், ADAS சூட், 360-டிகிரி கேமரா மற்றும் ஒன்பது ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், 10-பாயின்ட் மசாஜ், 10-வழி பவர் அட்ஜஸ்ட்மென்ட், ஹீட், வென்டிலேட்டெட் மற்றும் மெமரி செயல்பாடுகளுடன் கூடிய இரண்டாம் வரிசை கேப்டன் இருக்கைகளும் வழங்கப்படுகின்றன.

X