2026 ஹோண்டா எலிவேட்: நிறங்கள், வேரியண்ட் மற்றும் முழு விவரம்

புதிய 2026 ஹோண்டா எலிவேட் மாடல் ஆறு வித வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது.
Honda Elevate Facelift
Published on: 

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது.

புதிய எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக விலை ரூ. 11.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

மேம்படுத்தப்பட்ட இந்த நடுத்தர ரக எஸ்.யூ.வி. புதிய அம்சங்கள், மாற்றியமைக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் ஒரு புதிய டாப்-ஸ்பெக் வேரியன்ட்டை பெற்றுள்ளது.

வண்ண விருப்பங்கள்:

வண்ணங்களைப் பொறுத்தவரை, புதிய ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் ஏழு மோனோ-டோன் மற்றும் மூன்று டூயல்-டோன் பெயிண்ட்களில் வழங்கப்படுகிறது.

அவற்றுள் நார்டிக் ஃபாரஸ்ட் பியர்ல், கிரிஸ்டல் பிளாக் பியர்ல், அப்சிடியன் ப்ளூ பியர்ல், ரேடியன்ட் ரெட் மெட்டாலிக், மீடியோராய்டு கிரே மெட்டாலிக், லூனார் சில்வர் மெட்டாலிக், பிளாட்டினம் ஒயிட் பியர்ல் மோனோ டோன் ஆப்ஷனில் கிடைக்கின்றன.

இவற்றுடன் பிளாக் ரூஃப் - நார்டிக் ஃபாரஸ்ட் பியர்ல், பிளாக் ரூஃப் - பிளாட்டினம் ஒயிட் பியர்ல் மற்றும் பிளாக் ரூஃப் - ரேடியன்ட் ரெட் மெட்டாலிக் ஆகியவை டூயல் டோன் ஆப்ஷன்களாக வழங்கப்படுகின்றன.

வேரியண்ட் விவரங்கள்:

2026 ஹோண்டா எலிவேட் மாடல் SV, V, VX, ZX, ZX+ மற்றும் ZX+ பிளாக் என ஆறு ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

புதிய ஹோண்டா எலிவேட்டில் உள்ள முக்கிய மாற்றங்களில், இந்த செக்மென்ட்டிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் வென்டிலேட் செய்யப்பட்ட பின் இருக்கைகள், 360-டிகிரி கேமரா, ஏர் பியூரிஃபையர், புதிய கிரில்லுக்கு மேலே உள்ள மூன்று பாகங்கள் கொண்ட LED லைட் பார், கனெக்ட்டெட் LED டெயில் லைட்கள், பவர்டு முன் இருக்கைகள், கெபாசிட்டிவ்-டச் LED கேபின் லைட்கள் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட்கள் ஆகியவை அடங்கும்.

என்ஜின் மற்றும் செயல்திறன்:

புதிய 2026 ஹோண்டா எலிவேட் மாடல் 119bhp பவர், 145Nm டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் என்ஜினுடன் வருகிறது. இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் (MT) மற்றும் 6-ஸ்பீடு CVT சிஸ்டம்களுடன் வழங்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com