பி.எஸ்.6 எர்டிகா சி.என்.ஜி. இந்தியாவில் அறிமுகம்

மாருதி சுசுகி நிறுவனத்தின் பி.எஸ்.6 எர்டிகா சி.என்.ஜி. மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
எர்டிகா பி.எஸ்.6 சி.என்.ஜி.
எர்டிகா பி.எஸ்.6 சி.என்.ஜி.
Published on

மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா பி.எஸ்.6 சி.என்.ஜி. மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சி.என்.ஜி. மாடல் வி.எக்ஸ்.ஐ. வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.

மாருதி சுசுகி எர்டிகா அந்நிறுவனத்தின் இரண்டாவது பி.எஸ்.6 சி.என்.ஜி. வாகனமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மாருதி சுசுகி ஆல்டோ காரின் சி.என்.ஜி. வேரியண்ட்டை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. புதிய சி.என்.ஜி. வேரியண்ட்களில் இ.சி.யு. மற்றும் இன்டெலிஜண்ட் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய எர்டிகா பி.எஸ்.6 சி.என்.ஜி. மாடலில் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் பெட்ரோல் மோடில் 103 பி.ஹெச்.பி. பவர், சி.என்.ஜி. மோடில் 91 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. 

இத்துடன் பெட்ரோல் மோடில் 138 என்.எம். டார்க் மற்றும் சி.என்.ஜி. மோடில் 122 என்.எம். டார்க் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com