இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்யும் வின்ஃபாஸ்ட்

இது மணிக்கு 130 கி.மீ. உச்ச வேகத்தை வழங்கக்கூடிய 50kW மின்சார மோட்டாரைப் பயன்படுத்தக்கூடும்.
Vinast EV 2 wheeler
Published on: 

வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் மேலும் இரண்டு மின்சார இருசக்கர வாகனங்களுக்கான வடிவமைப்பு காப்புரிமைகளை தாக்கல் செய்துள்ளது. இது, மின்சார கார்களை தாண்டி தனது தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தும் வியட்நாமிய மின்சார வாகன உற்பத்தியாளரின் திட்டங்களை உணர்த்துகிறது.

சமீபத்திய இந்த தாகவல்களில், வென்டோ எஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒரு மின்சார ஸ்கூட்டரும், வின்ஃபாஸ்ட்டின் செயல்திறன் சார்ந்த மோட்டார்சைக்கிள் கருத்தை அடிப்படையாக கொண்ட ஒரு ஸ்போர்ட் மின்சார பைக் மாடலும் அடங்கும்.

காப்புரிமை பட்டியல்:

இந்த இரண்டு மாடல்களில் எதுவுமே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், 15 மாநிலங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மின்சார இருசக்கர வாகன விற்பனையகங்களுடன் வின்ஃபாஸ்ட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட சிறிது காலத்திலேயே இந்த காப்புரிமைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த மின்சார ஸ்கூட்டர், பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025-இல் காட்சிப்படுத்தப்பட்ட வென்டோ எஸ் ஸ்கூட்டரின் பல வடிவமைப்பு அம்சங்களை பகிர்ந்து கொள்கிறது. இந்த ஸ்கூட்டரின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம், பெரும்பாலான மின்சார ஸ்கூட்டர்களில் காணப்படும் ஹப்-மவுண்டட் அமைப்பில் இருந்து மாறுபட்டு, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட மின்சார மோட்டார் ஆகும்.

வியட்நாமில், வென்டோ எஸ் ஸ்கூட்டர் 5.2kW மின்சார மோட்டாருடன் 3.5kWh LFP பேட்டரி இணைக்கப்பட்டு கிடைக்கிறது. இது மணிக்கு 89 கி.மீ. உச்சபட்ச வேகத்தையும், 160 கி.மீ. தூரம் வரை பயணிக்கும் திறனையும் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

மற்றொரு காப்புரிமையானது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வின்ஃபாஸ்ட் காட்சிப்படுத்திய கான்செப்ட் பைக்கின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு போன்ற தோற்றமுடைய ஒரு மின்சார மோட்டார்சைக்கிளுக்கானது. இது ஒரு பெரிய பேட்டரி மற்றும் மோட்டார் உறை, ஸ்போர்ட்டியான பாடிவொர்க் மற்றும் அகலமான டயர்களை கொண்டுள்ளது.

மின் மோட்டார்சைக்கிள்:

இந்த மின்சார மோட்டார்சைக்கிள் பிளாட்ஃபார்ம், ஸ்ட்ரீட்-நேக்டு, குரூயிஸர் மற்றும் ஸ்போர்ட் பைக் பதிப்பு உள்ளிட்ட பல பாடி ஸ்டைல்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வின்ஃபாஸ்ட் இந்த பிளாட்ஃபார்ம் குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை என்றாலும், இது மணிக்கு 130 கி.மீ. உச்ச வேகத்தை வழங்கக்கூடிய 50kW மின்சார மோட்டாரைப் பயன்படுத்தக்கூடும் என்று வியட்நாமில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தனது மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கான அடித்தளத்தை படிப்படியாக அமைத்து வருகிறது. இந்நிறுவனம், பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025-இல் ஐந்து மின்சார ஸ்கூட்டர்களை காட்சிப்படுத்தியதுடன், அதனை தொடர்ந்து நாட்டில் பல ஸ்கூட்டர்களுக்கான காப்புரிமையையும் பெற்றுள்ளது.

இருப்பினும், காப்புரிமை விண்ணப்பங்கள் உடனடியாக அறிமுகம் செய்யப்படும் என்பதற்கு உறுதியான சான்றாக அமையாது. இருசக்கர வாகன பிரிவில் இந்தியாவில் நுழைவது குறித்த கூடுதல் விவரங்களை வின்ஃபாஸ்ட் இன்னும் அறிவிக்கவில்லை.

X