வேற லெவல் அம்சங்களுடன் 343 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்த அல்ட்ராவயலெட்

இந்த எலெக்ட்ரிக் பைக் அதிகபட்சம் மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ultraviolette X-47 Venom
Published on: 

அல்ட்ராவயலெட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய X-47 வெனோம் மாடலை அறிமுகம் செய்தது. புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ரூ. 2.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அல்ட்ராவயலெட் நிறுவனத்தின் புதிய VX-100 100V பிளாட்ஃபார்மை பயன்படுத்தும் முதல் மாடல் X-47 வெனோம் ஆகும். இந்த இ-பைக்கின் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், இதன் விநியோகம் நவம்பர் மாத வாக்கில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அறிமுக விலை:

புதிய X-47 வெனோம் மாடலின் விலை முதல் 5,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். அல்ட்ரா வயலெட் X-47 வெனோம், EICMA 2026 கண்காட்சியிலும் காட்சிப்படுத்தப்படும். இது, சக்கரத்தில் 550Nm டார்க் உருவாக்கும் புதிய 30kW (40bhp) மின்சார மோட்டாரால் இயக்கப்படுகிறது.

இந்த பைக் மணிக்கு 60 கி.மீ வேகத்தை 2.7 வினாடிகளிலும், 0-100 கி.மீ வேகத்தை 5.9 வினாடிகளிலும் எட்டும் என்றும், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 155 கி.மீ என்றும் அல்ட்ராவயலெட் நிறுவனம் கூறுகிறது.

ரேன்ஜ் மற்றும் சார்ஜிங்:

அல்ட்ராவயலெட் X-47 வெனோம், IDC-சான்றளிக்கப்பட்ட 343 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் மொத்தத்தில் 180 கிலோ எடையை கொண்டுள்ளது. இது X-47 கிராஸ்ஓவரை விட 20 கிலோ வரை எடை குறைவானது. இந்த மோட்டார்சைக்கிளில் 1.6kW ஆன்-போர்டு சார்ஜர் உள்ளது.

மேலும் இது 12kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. இந்த பைக்கில் புதிய UV லைட்ஃபியூரி மோட்டார், 11kWh SRB-11 பேட்டரி பேக் மற்றும் மேம்படுத்தப்பட்ட மோட்டார் கண்ட்ரோல் யூனிட் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதர அம்சங்கள்:

புதிய அல்ட்ராவயலெட் X-47 வெனோம், புதிய 7-இன்ச் TFT டச்-ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஒருங்கிணைந்த முன் மற்றும் பின் டேஷ்கேம்கள், க்ரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் Mappls மூலம் இயக்கப்படும் நேவிகேஷன் ஆகியவற்றை பெறுகிறது. மேலும், இது பார்க் அசிஸ்ட் அம்சத்தையும் கொண்டுள்ளது; இது பின் கேமரா காட்சிகளை பயன்படுத்தி, குறுகிய இடங்களில் மோட்டார்சைக்கிளை பின்னோக்கி நகர்த்த உதவுகிறது.

இது பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டரிங், லேன்-சேஞ்ச் அசிஸ்டன்ஸ், ஓவர்டேக் அலர்ட்ஸ் மற்றும் ரியர்-கொலிஷன் வார்னிங்ஸ் போன்ற ரேடார் அடிப்படையிலான அம்சங்களையும் பெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com