உற்பத்தியில் ஒரு கோடி யூனிட்களை கடந்த டிவிஎஸ் ஸ்கூட்டர்

இந்திய இருசக்கர வாகன சந்தையில் 2013-ஆம் ஆண்டு டி.வி.எஸ். ஜூப்பிட்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
Jupiter Milestone
Published on: 

தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள தனது உற்பத்தி ஆலையில் இருந்து டி.வி.எஸ். ஜூப்பிடர் ஸ்கூட்டர் வெளிவந்ததை அடுத்து, இந்தியாவில் அதன் ஒட்டுமொத்த உற்பத்தி ஒரு கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

2013-இல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜூப்பிட்டர், இந்த எண்ணிக்கையை அடைய சுமார் 13 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. ஒட்டுமொத்த உற்பத்தியில் ஒரு கோடி யூனிட்களை எட்டிய இந்தியாவின் மிக இளமையான மற்றும் வேகமான ஸ்கூட்டர் பிராண்ட் ஜூப்பிட்டர் என்று டி.வி.எஸ். கூறுகிறது.

தற்போது ஜூப்பிட்டர் 110 மற்றும் ஜூப்பிட்டர் 125 ஆகியவற்றை உள்ளடக்கிய, விரிவடைந்து வரும் தனது ஜூப்பிட்டர் குடும்பத்தின் மூலம் நிறுவனம் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.

அந்த ஸ்கூட்டரின் முதல் 50 லட்சம் யூனிட்டுகளை தயாரிக்க ஒன்பது ஆண்டுகள் ஆனது. மேலும், அடுத்த 50 லட்சம் யூனிட்கள் வெறும் நான்கு ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்டன.

சராசரி உற்பத்தி விகிதம்:

இது, முதல் ஒன்பது ஆண்டுகளில் சுமார் 5.6 லட்சம் யூனிட்டுகளாக இருந்த சராசரி ஆண்டு உற்பத்தி விகிதம், அதனை தொடர்ந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 12.5 லட்சம் யூனிட்டுகளாக கணிசமாக அதிகரித்திருப்பதை காட்டுகிறது.

அன்றாட போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதில் தொடர்ச்சியாக மேம்பாடுகளை செய்வதன் மூலம், ஜூப்பிட்டர் குடும்ப ஸ்கூட்டர் பிரிவில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. இந்த குடும்ப ஸ்கூட்டர், சௌகரியம், நடைமுறை பயன்பாடு மற்றும் எளிதான பராமரிப்பு ஆகியவற்றை மையமாக கொண்டு தனது அடையாளத்தை உருவாக்கியுள்ளது.

X