குறைந்த விலையில் இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யும் சிம்பில் எனர்ஜி

சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புதிய அம்சங்களுடன் சமீபத்தில் விற்பனைக்கு வந்தது. புதிய சிம்பில் எனர்ஜி ஸ்கூட்டர்களின் விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கிறது.
குறைந்த விலையில் இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யும் சிம்பில் எனர்ஜி
Published on

சிம்பில் எனர்ஜி நிறுவனம் விரைவில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சிம்பில் ஒன் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கவர்ச்சிகர விலை கொண்டிருக்கும் என்றும் இவை சிம்பில் ஒன் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் என்றும் சிம்பில் எனர்ஜி தெரிவித்து உள்ளது. தற்போது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி வேறு எந்த தகவலும் இல்லை.

எனினும், விலை அடிப்படையில் பார்க்கும் போது, புதிய ஸ்கூட்டர்களில் சற்றே சிறிய பேட்டரி பேக் மற்றும் அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களிடம் சிம்பில் எனர்ஜி வாகனங்களை கொண்டு சேர்க்க முடியும்.

முந்தைய காலக்கட்டத்தில் சிம்பில் எனர்ஜி நிறுவனம் புதிய வாகனங்கள் வெளியீடு பற்றிய தகவல் அளித்து, பின் அதனை தாமதமாக வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில், புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வெளியீடு தாமதமாகுமோ என்ற கேள்வி பரவலாக ஏற்பட்டுள்ளது. இந்த முறையாவது சிம்பில் எனர்ஜி நிறுவனம் சொன்னதை செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com