ரெவோல்ட் RV400 எலெக்ட்ரிக் பைக் முன்பதிவு மீண்டும் துவக்கம்

ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் RV400 மாடலின் முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 499 ஆகும். ரெவோல்ட் RV400 மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி, 5 கிலோவாட் பவர் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரெவோல்ட் RV400 எலெக்ட்ரிக் பைக் முன்பதிவு மீண்டும் துவக்கம்
Published on

ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் தனது RV400 எலெக்ட்ரிக் பைக் மாடலுக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது. புதிய ரெவோல்ட் RV400 முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த மாடலுக்கான வினியோகம் மார்ச் 31 ஆம் தேதிக்குள் வினியோகம் செய்யப்படுகிறது.

சமீபத்தில் தான் ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தை ரத்தன்இந்தியா எண்டர்பிரைசஸ் நிறுவனம் முழுமையாக விலைக்கு வாங்கியது. இந்த எலெக்ட்ரிக் பைக் ஹரியானா மாநிலத்தில் உள்ள ரெவோல்ட் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ரெவோல்ட் RV400 மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி, 5 கிலோவாட் பீக் பவர் வெளிப்படுத்தும் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 54 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. இந்த எலெக்ட்ரிக் பைக் யுஎஸ்டி ஃபோர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது.

இத்துடன் முன்புறம் மற்றும் பின்புறம் டிஸ்க் பிரேக் மற்றும் CDS வழங்கப்பட்டுள்ளது. ரெவோல்ட் RV400 மாடல் முழு சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்கிறது. இதில் உள்ள பேட்டரியை 4.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். ரெவோல்ட் RV400 மாடல்- ரெவோல்ட், ரிபெல், ரேஜ் மற்றும் ரோர் என நான்கு வித சத்தங்களை வெளிப்படுத்துகிறது.

ரைடிங் மோட்களை பொருத்தவரை இகோ, ஸ்போர்ட் மற்றும் பவர் என மூன்று வித ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மற்ற அம்சங்களாக எல்இடி ஹெட்லேம்ப்கள், டிஜிட்டல் கன்சோல், கீலெஸ் இக்னிஷன், மாற்றக்கூடிய பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. தற்போது ரெவோல்ட் RV400 விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com